​​ மீண்டும் நெருப்புக் குழம்பை உமிழ்கிறது எட்னா எரிமலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மீண்டும் நெருப்புக் குழம்பை உமிழ்கிறது எட்னா எரிமலை

Published : Aug 25, 2018 12:20 PMமீண்டும் நெருப்புக் குழம்பை உமிழ்கிறது எட்னா எரிமலை

Aug 25, 2018 12:20 PM

இத்தாலி நாட்டில் உள்ள மவுண்ட் எட்னா (Mount Etna) எரிமலை மீண்டும் நெருப்புக் குழம்பை உமிழத் தொடங்கியுள்ளது.

image

image

சிசிலி தீவில் உள்ள எட்னா எரிமலை கடந்த 1996ம் ஆண்டுக்குப் பின் 2013ம் ஆண்டிலும் அதனைத் தொடர்ந்து அவ்வப்போது வெடித்துச் சிதறி வருகிறது. இறுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெடித்துச் சிதறிய பின் அமைதி காத்த இந்த எரிமலை தற்போது மீண்டும் உயிர்ப்பித்து எழுந்துள்ளது. சுமார் 500 அடி உயரத்திற்கு நெருப்புக் குழம்பையும், புகையையும் வெளிவிடும் எட்னாவை நிலவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பெரிய அளவில் வெடிக்கும் அபாயம் இருப்பது தெரியவந்தால் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற நேரிடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.