​​ வெள்ளத்தைத் தொடர்ந்து கேரள மக்களை பாம்புகளும், விஷப்பூச்சிகளும் பயமுறுத்தி வருகின்றன
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளத்தைத் தொடர்ந்து கேரள மக்களை பாம்புகளும், விஷப்பூச்சிகளும் பயமுறுத்தி வருகின்றன


வெள்ளத்தைத் தொடர்ந்து கேரள மக்களை பாம்புகளும், விஷப்பூச்சிகளும் பயமுறுத்தி வருகின்றன

Aug 25, 2018 11:59 AM

பேய் மழை, பெரு வெள்ளத்தைத் தொடர்ந்து கேரள மக்களை பாம்புகளும், விஷப்பூச்சிகளும் பயமுறுத்தி வருகின்றன.

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் இறந்து விட்ட நிலையில், தற்போதுதான் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

image

இந்நிலையில் வெள்ளத்தால் மக்கள் மட்டுமின்றி மற்ற உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக வீடுகளுக்குள் பாம்புகள் வருவது அதிகரித்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டுச் சுவரில் இருந்த மலைப்பாம்பை பெண் ஒருவர் கம்பால் விரட்டியடித்த வீடியோ வெளியானது.

இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து ராஜநாகம், நல்லபாம்பு உள்ளிட்ட விஷம் கொண்ட பாம்புகளும் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் மீட்புப் பணிகளுடன் பாம்புகளைப் பிடிக்கும் பணியிலும் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.