​​ விஜய் மல்லையாவை அடைக்க இருக்கும் சிறையின் வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஜய் மல்லையாவை அடைக்க இருக்கும் சிறையின் வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்


விஜய் மல்லையாவை அடைக்க இருக்கும் சிறையின் வீடியோ லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல்

Aug 25, 2018 11:33 AM

மோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தும் பட்சத்தில், அவர் அடைக்கப்பட உள்ள சிறையின் வீடியோ இங்கிலாந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

வங்கி கடன் மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா மீதான வழக்கில், அவரை நாடுகடத்தும் பட்சத்தில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்படுவார் என வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்தது.

இதையடுத்து சிறையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வசதிகள் குறித்து வீடியோவாக தாக்கல் செய்ய கடந்த மாதம் 31ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் சிபிஐ ஆர்தர் சாலை சிறையை வீடியோ எடுத்துள்ளது. அதில் 12ம் எண் அறையில் போதிய சூரிய வெளிச்சம் வருவது காட்டப்பட்டுள்ளது. மேலும் தனியாக கழிவறை, தொலைக்காட்சி பெட்டி, சுத்தமான படுக்கை, தலையணை போன்றவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.