​​ மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க, வரும் திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க, வரும் திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்...


மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க, வரும் திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்...

Aug 25, 2018 11:12 AM

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசிக்க, வரும் திங்கட்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. 

பொதுத் தேர்தல்களை நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பாதுகாப்பாகவும் நடத்திட இந்திய தேர்தல் ஆணையம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளது.

image

இத்தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறியவும், தேர்தல் குறித்து ஆலோசிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வரும் 27ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பதிவு பெற்ற அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜனநாயக அமைப்பை பலப்படுத்த அனைத்துக் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிக அளவில் அரசியல் கட்சிகள் நிறுத்துவதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

image

தேர்தல் செலவினங்கள், ஒழுங்குமுறைகள், போன்றவையும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்பாக அனைத்து வகை பிரச்சாரங்களும் நிறுத்துவது குறித்தும் மின்னணு ஊடகங்கள் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் நாளில் அரசியல் விளம்பரங்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க உள்ளது.