​​ தூய்மையான ரயில்கள் பற்றி ஆய்வுசெய்து தரவரிசை வெளியிட ரயில்வே துறை முடிவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தூய்மையான ரயில்கள் பற்றி ஆய்வுசெய்து தரவரிசை வெளியிட ரயில்வே துறை முடிவு

Published : Aug 25, 2018 12:28 AMதூய்மையான ரயில்கள் பற்றி ஆய்வுசெய்து தரவரிசை வெளியிட ரயில்வே துறை முடிவு

Aug 25, 2018 12:28 AM

தூய்மையான ரயில் நிலையங்களைத் தரவரிசைப் பட்டியலிட்டதைப் போல், தூய்மையான ரயில்களையும் தரவரிசைப்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

தூய்மையின் அடிப்படையில் தரவரிசைப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 407ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஏ1 தரத்தில் உள்ள நிலையங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூர் முதலிடமும் ஜெய்ப்பூர் இரண்டாமிடமும் பிடித்தன.  இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையில் இயங்கும் இருநூறு ரயில்களிலும் தூய்மை குறித்து ஆய்வு செய்து தரவரிசைப் பட்டியலிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

கழிவறைகளின் தூய்மை, படுக்கை விரிப்புகளின் தரம், ஓடும் ரயிலில் தூய்மைப் பணிகள் செய்வது, தூய்மையாக்கப் பயன்படுத்தும் வேதிப்பொருட்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும். ஐம்பது தணிக்கைக் குழுக்கள் அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.