​​ BBL தொடரை நேரில் கண்டுகளித்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
BBL தொடரை நேரில் கண்டுகளித்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

BBL தொடரை நேரில் கண்டுகளித்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்

Jan 22, 2018 4:21 PM

ஆஸ்திரேலியாவின் 20 ஓவர் கிரிக்கெட் தொடரான பிக் பேஸில் ((big Bash)) ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ((Will smith)) பங்கேற்று வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

மெல்போர்ன் ஸ்டார்ஸ், சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நேற்று நடைபெற்றது.

இதில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பங்கேற்று, டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன், சிட்னி தண்டர் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன், உஸ்மான் காவாஜா ஆகியோரை வில் ஸ்மித் சந்தித்து பேசினார்.