​​ காதலரை கரம் பிடித்தார் நடிகை பாவனா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காதலரை கரம் பிடித்தார் நடிகை பாவனா

Published : Jan 22, 2018 4:19 PM

காதலரை கரம் பிடித்தார் நடிகை பாவனா

Jan 22, 2018 4:19 PM

நடிகை பாவனா தனது காதலரும் கன்னட திரைப்படத் தயாரிப்பாளருமான நவீனை கரம் பிடித்தார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திரைப்பட நடிகைகள் ரம்யா நம்பீசன், ஷ்ரத்தா உள்ளிட்டோர் நேற்று மாலை முதலே மெகந்தி உள்ளிட்ட சடங்குகளில் பங்கேற்றனர். இன்று மாலையில், மலையாள திரைப்பட உலகினர் உள்ளிட்டோர் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பாவனாவும் நவீனும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு மார்ச் 9ம் தேதி இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின் திருமணம் நடைபெற்றுள்ளது.