​​ மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை - தலைமைத் தேர்தல் ஆணையர் திட்டவட்டம்

Aug 24, 2018 11:41 AM

மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமே இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் செலவினங்கள் வெகுவாக குறையும் என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக சட்டக் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்தன. அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வராமல், ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று அவுரங்காபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், 440 அலுவலர்களை வைத்துக் கொண்டு சுமார் ஒரு கோடியே 11 லட்சம் பேரை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.மக்களவைத் தேர்தலுக்கு 14 மாதங்கள் முன்பே பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டதையும் அவர் சுட்டிக் காட்டினார்.