​​ எடப்பாடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ சார்பில் விண்வெளி அறிவியல் குறித்து விளக்கம், கலந்துரையாடல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எடப்பாடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ சார்பில் விண்வெளி அறிவியல் குறித்து விளக்கம், கலந்துரையாடல்

எடப்பாடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ சார்பில் விண்வெளி அறிவியல் குறித்து விளக்கம், கலந்துரையாடல்

Aug 24, 2018 12:04 AM

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் இஸ்ரோ சார்பில் விண்வெளி அறிவியல் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.

புதுப்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பசுமைப் பேனா உருவாக்கி கவனம் ஈர்த்தவர்கள். பல்வேறு விஞ்ஞான ரீதியிலான போட்டிகளிலும் பங்கேற்று வருகின்றனர். இவர்களது திறனை மேலும் வளர்க்கும் வகையில் பயிற்சியளிப்பதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக இந்தப் பள்ளியை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.

இதன்படி, மத்திய அரசின் அறிவியல் பரப்புதல் மையத்தின் இயக்குனர் பாலமோகன், மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடி, விண்வெளி அறிவியல் குறித்து விளக்கினார். பின்னர் விண்வெளி ஆராய்ச்சி பற்றி திரையில் காண்பித்து பயிற்சி அளித்தார்.