​​ ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் அங்கிதா ரெய்னா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் அங்கிதா ரெய்னா

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் அங்கிதா ரெய்னா

Aug 23, 2018 6:03 PM

ஆசிய விளையாட்டு மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அங்கிதா ரெய்னா வெண்கலப் பதக்கம் வென்றார். 

மகளிர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, சீனாவின் ஜாங் சூஇ (Zhang shuai) யை எதிர்கொண்டார். இதில் தோல்வியுற்ற அங்கிதா ரெய்னா, மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார். 

இது, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெல்லும் 9ஆவது வெண்கலப் பதக்கம் ஆகும். ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதால் வெள்ளிப்பதக்கம் உறுதியாகி உள்ளது.