​​ சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது குறித்த கடிதப் பரிமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது குறித்த கடிதப் பரிமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Published : Aug 23, 2018 5:37 PM

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது குறித்த கடிதப் பரிமாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Aug 23, 2018 5:37 PM

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ க்கு மாற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் இடையில் நடந்த கடிதப் பரிமாற்ற ஆவண விவரங்களை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பான தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்ற ஆவணங்களை தமக்கு வழங்குமாறு மனுதாரர் யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.

கடித தொடர்புகளை மனுதாரருக்கு வழங்க முடியாது என்றும், அதுகுறித்த விவரங்களை நீதிமன்றத்தின் பார்வைக்கு மட்டும் அளிக்க தயாராக இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடித பறிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சிபிஐக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப மனுதாரரான ராஜேந்திரனுக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.