​​ வரும் 2020ம் ஆண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையை மாற்ற CBSE திட்டம்?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வரும் 2020ம் ஆண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையை மாற்ற CBSE திட்டம்?

வரும் 2020ம் ஆண்டில் 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையை மாற்ற CBSE திட்டம்?

Aug 23, 2018 5:06 PM

வரும் 2020ம் ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முறையை சிபிஎஸ்இ மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வொகேஷனல் எனப்படும் தொழில்சார் கல்வி பயிலும் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், பிற பாடப்பிரிவு மாணவர்களுக்கு மார்ச் 15-ம் தேதிக்குள்ளும் தேர்வுகளை நடத்தி முடிப்பது குறித்து சிபிஎஸ்இ ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் முன்கூட்டியே தேர்வுகளை முடித்து தேர்வுத் தாள் திருத்துவதையும், முடிவுகளை அறிவிப்பதையும் முன்கூட்டியே வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மாற்றங்கள் 2020-ம் ஆண்டு முதல் அமலாக வாய்ப்புள்ளது