​​ வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்

Published : Jan 22, 2018 4:17 PMவங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் – சப்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பியோட்டம்

Jan 22, 2018 4:17 PM

புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை அருகே கூட்டுறவு வங்கியின் சுவரில் துளையிட்டு மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காவலாளியை கட்டிப்போட்ட மர்ம நபர்கள் 9 பேர், பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

சிறிது நேரத்தில் வங்கிக் காவலாளியைத் தேடி அங்கு வந்த அவரது நண்பர், அவர் கட்டிப்போடப்பட்டிருப்பதைப் பார்த்து கூச்சலிட்டு கிராம மக்களைத் திரட்டியுள்ளார்.

இதையடுத்து அவரையும் தாக்கிவிட்டு 2 மடிக்கணிணிகளை மட்டும் எடுத்துக்கொண்டு வந்த வழியே மர்ம நபர்கள் தப்பியோடினர். தகவலறிந்து வந்த கந்தவர்கோட்டை காவல்துறையினர் தப்பியோடியவர்களைத் தேடி வருகின்றனர்.