​​ கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு ?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு ?

கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொந்தரவு ?

Aug 22, 2018 4:38 PM

திருவண்ணாமலை அருகே தனக்கு கல்லூரி பேராசியர் பாலியல் தொல்லை கொடுத்ததோடு, தவறான பாதைக்கு விடுதிகாப்பாளர் அழைத்ததாக அரசு வேளாண்மை கல்லூரி மாணவி பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகின்றது. இந்த கல்லூரி விடுதியில் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தங்கிப்படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வறிக்கை சமர்பிக்கச் சென்ற அம்மாணவிக்கு கல்லூரியின் பேராசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான தங்கபாண்டியன், ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, உதவி விடுதி கண்காணிப்பாளர் புனிதா மற்றும் உதவியாளர் மைதிலி ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் மாணவியின் புகாரை கண்டுகொள்ளாத விடுதி உதவி கண்காணிப்பாளர் புனிதா, கல்லூரி விடுதி என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும் என்றும், மாணவிகள் தான் பொறுத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலியல் தொல்லை தொடர்பாக புகார் அளித்த தன்னை விடுதி கண்காணிப்பாளர் பேராசியர் தங்கபாண்டியன், மற்றும் கண்காணிப்பாளர் புனிதா ஆகியோர் தொடர்ந்து தவறான பாதைக்கு அழைத்ததாகவும், தனது படிப்பை பாதியில் நிறுத்தி வெளியில் அனுப்பி விடுவதாக மிரட்டுவதாகவும் அம்மாணவி கூறியுள்ளார்.

இதனிடையே, மாணவியின் புகாரை கல்லூரி நிர்வாகத்தினர் முழுமையாக மறுத்துள்ளனர். கல்லூரி விடுதியில் மாணவியின் செயல்பாடுகள் தவறாக இருந்ததை கண்காணிப்பாளர் தங்கப்பாண்டியன் கண்டித்ததால், அவர் மீது தவறான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கல்லூரியின் முதல்வரான ராஜேந்திரன் கூறியுள்ளார்.