​​ சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து ஒடிசா இளைஞர் தற்கொலை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து ஒடிசா இளைஞர் தற்கொலை

Published : Aug 22, 2018 3:30 PM

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து ஒடிசா இளைஞர் தற்கொலை

Aug 22, 2018 3:30 PM

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து, வடமாநில இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 6 மாடிகளைக் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின்மீது, இன்று காலையில் ஏறிய ஒடிசாவைச் சேர்ந்த சேதன் குமார் என்ற 20 வயது இளைஞர்,  மாடியில் இருந்து கார் பார்க்கிங் பகுதியில் குதித்துள்ளார்.

உடனடியாக மீட்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.