​​ தனியார் விமான நிறுவனங்கள் நிதி உள்ளிட்ட அனைத்து பிரச்சினையை அவரவரே தீர்க்க வேண்டும்: சுரேஷ் பிரபு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தனியார் விமான நிறுவனங்கள் நிதி உள்ளிட்ட அனைத்து பிரச்சினையை அவரவரே தீர்க்க வேண்டும்: சுரேஷ் பிரபு

Published : Aug 22, 2018 12:04 AM

தனியார் விமான நிறுவனங்கள் நிதி உள்ளிட்ட அனைத்து பிரச்சினையை அவரவரே தீர்க்க வேண்டும்: சுரேஷ் பிரபு

Aug 22, 2018 12:04 AM

தனியார் விமான நிறுவனங்கள், நிதி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும், அவர்களாகவே தீர்த்துக் கொள்ள வேண்டும் என விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்திருக்கிறார்..

எரிபொருள் விலையேற்றம், கடுமையான போட்டி உள்ளிட்ட காரணிகளால், தனியார் விமான நிறுவனங்கள், நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நிதி விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும், தனியார் விமான நிறுவனங்களே தீர்வு காண வேண்டும் என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

விமான சேவையில், மத்திய அரசு கொள்கை அளவிலான முடிவுகளை மட்டுமே எடுக்கும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். நிதி நெருக்கடியிலிருந்து, தப்பிக்க, தனியார் நிறுவனங்கள் கோருவது போல், விமான எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுரேஷ் பிரபு கூறியிருக்கிறார்.