​​ நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் : மத்திய அரசு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் : மத்திய அரசு


நீட் தேர்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் : மத்திய அரசு

Aug 21, 2018 11:51 PM

ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு என்ற உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை விடுத்துள்ள அறிவிப்பில், நீட் தேர்வு இனிமேல் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு வருகிற நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்றதை போன்றே அதே நடைமுறைப்படி தேர்வு நடைபெறும் என்றும், பேப்பரில், பேனா கொண்டு மாணவர்கள் தேர்வை எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.