​​ காட்பாடி அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காட்பாடி அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம்

காட்பாடி அருகே ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டம்

Jan 22, 2018 4:06 PM

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று காலை வேலூர் மாவட்டம் காந்திநகர் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.

பின்னர் புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுடன் இணைந்து, தூய்மை இந்தியா உறுதிமொழியை ஆளுநர் ஏற்றார்.

பின்னர், வேலூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அவருடன் ஆட்சியர் ராமன் மற்றும் அதிகாரிகளும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட திமுகவினர், விருகம்பட்டு பகுதியில் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக தொண்டர் ஒருவர் கருப்புகொடியுடன் ஆளுநர் காருக்கு முன் பாய்ந்தார். அவரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.