​​ கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 3 லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 3 லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

Published : Aug 21, 2018 12:31 PM

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் 3 லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்

Aug 21, 2018 12:31 PM

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் மூன்று லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரில் இருந்து வந்த 3 லாரிகளை அவர்கள் சோதனையிட்டபோது, ஒவ்வொரு லாரியிலும் 50 மூட்டை குட்கா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சிதம்பரம் மற்றும் நாகர்கோவிலுக்கு ஏற்றிச் சென்றதாகவும், ஒரு லாரி சென்று விட்டதாகவும் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து மற்றொரு லாரியை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.