​​ கேரளத்து நடிகைகள் செய்தது என்ன ? வெள்ளத்தில் நெகிழ்ந்த உள்ளங்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளத்து நடிகைகள் செய்தது என்ன ? வெள்ளத்தில் நெகிழ்ந்த உள்ளங்கள்

கேரளத்து நடிகைகள் செய்தது என்ன ? வெள்ளத்தில் நெகிழ்ந்த உள்ளங்கள்

Aug 20, 2018 11:24 PM

கேரளாவில் வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பதை அறிந்து தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து பிரபல நடிகைகளும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

image

கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரளாவை கனமழையும், வரலாறு காணாத வெள்ளமும் புரட்டி போட்டிருக்கிறது. 350க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசு 10 கோடி ரூபாய் நிதிஉதவி அளித்துள்ளது. தவிக்கும் மக்களுக்கு உதவ தமிழக மக்கள் அன்பு கரம் நீட்டி நிவாரண பொருட்களை வாரி வழங்கி வரும் நிலையில், தமிழ் திரை படங்களில் நடித்துள்ள கேரளத்து நடிகைகளான அமலாபால், ரம்யா நம்பீசன். கீர்த்தி சுரேஷ், ஷானுஷா, உள்ளிட்டோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து அங்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படப்பிடிப்பில் கைமுறிவு ஏற்பட்ட நிலையில் நடிகை அமலாபால், தனது நண்பர்களுடன் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேவையான பொருட்களை அவரே சென்று வாங்கி வந்து தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார்

நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை ஷனுஷா மக்களுக்கு தற்போதைக்கு தேவையான மருந்து பொருட்களை கொடுத்து உதவ வேண்டு கோள் விடுத்தார்

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொடுத்து உதவுமாறு நடிகை மம்தா மோகன் தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்

தமிழ் மற்றும் கேரள திரை உலகில் லட்சங்களில் சம்பளம் பெறும் பெரும்பாலான  நடிகர் மற்றும் நடிகைகள் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்டு வருவதால், தமிழ் திரை உலகில் கோடிகளில் சம்பளம் பெறும்,அஜீத், விஜய் ஆகிய இருவரிடம் இருந்தும் பெரிய அளவில் உதவி வரும் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் கேரளாவில் உள்ள அவர்களது ரசிகர்கள்..!