​​ "ரெட்டி டைரி" படத்தில் தம்முடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது எடுத்த காட்சிகள் இடம்பெறும் : ஸ்ரீரெட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ரெட்டி டைரி" படத்தில் தம்முடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது எடுத்த காட்சிகள் இடம்பெறும் : ஸ்ரீரெட்டி


"ரெட்டி டைரி" படத்தில் தம்முடன் திரைப்பட பிரபலங்கள் நெருக்கமாக இருந்த போது எடுத்த காட்சிகள் இடம்பெறும் : ஸ்ரீரெட்டி

Aug 20, 2018 10:26 PM

திரைப்பட பிரபலங்கள் தம்முடன் நெருக்கமாக இருந்தபோது ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட காட்சிகள் தம்மிடம் இருப்பதாக கூறியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, அந்த காட்சிகள் அனைத்தும், தமது புதிய படத்தில் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தம்மை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது ரெட்டி டைரி என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த படத்தில்  தாம் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும், திரைப்பட பிரபலங்கள் தம்முடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் ரெட்டி டைரி படத்தில் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் முறையாக அனுமதி பெறப்படும் எனக் கூறியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, இனி சென்னையிலேயே தங்கியிருக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும், தம்மை ஏமாற்றிய மேலும் பலரின் விவரங்களையும் பேஸ்புக், டுவிட்டரில் தொடர்ந்து வெளியிட இருப்பதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.