​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் 50 ஆயிரம் விவசாயிகள் இன்று பிரம்மாண்டப் பேரணி - சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

Published : Mar 12, 2018 12:20 PM

மும்பையில் 50 ஆயிரம் விவசாயிகள் இன்று பிரம்மாண்டப் பேரணி - சட்டசபையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

Mar 12, 2018 12:20 PM

நாசிக்கில் இருந்து புறப்பட்ட 50 ஆயிரம் விவசாயிகளின் பிரம்மாண்டமான பேரணி மும்பையை அடைந்துள்ளது.

இன்று மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை வளாகம் முன்பு பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். விவசாயிகள் பேரணி காரணமாக மும்பை நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

சரக்கு வாகனங்கள் மும்பைக்குள் நுழைய இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய கடன்களை முழுவதும் ரத்து செய்ய வேண்டும், நிவாரணம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி விவசாய சங்கங்கள் ஓரணியில் திரண்டு பேரணியாக மும்பைக்கு படையெடுத்துள்ளன.