​​ பாக்., புதிய பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாக்., புதிய பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

பாக்., புதிய பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Aug 20, 2018 9:38 PM

இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருப்பதாக பாகிஸ்தான் கூறிய நிலையில், புதிய பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து மட்டுமே மோடி கூறியதாக, இந்தியா விளக்கம் அளித்துள்ளது.

பாகிஸ்தானின் 22வது பிரதமராக பதவியேற்ற இம்ரான் கான், அண்டை நாடுகளுடனான உறவை மேம்படுத்தும் வகையிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், புதிய பிரதமராக பதவியேற்ற அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கூறி கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், அந்த கடிதத்தில், இருதரப்பு உறவை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்தார். மேலும், பேச்சுவார்த்தைக்கு இம்ரான்கானை, பிரதமர் மோடி அழைத்துள்ளதாகவும் கூறினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் அமைச்சரின் இந்த தகவலை மறுத்துள்ள இந்தியா, புதிதாக பிரதமர் பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து மட்டுமே கூறி, மோடி கடிதம் எழுதியதாக விளக்கம் அளித்துள்ளது.