இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
Published : Aug 20, 2018 3:33 PM
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்ற முத்தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்ச்சியில், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், பேசிய மயில்சாமி அண்ணாதுரை, 36 ஆண்டுகள் நாட்டுக்காக பணியாற்றியதற்கு கிடைத்த மரியாதையாக, இந்த விருதை கருதுவதாக தெரிவித்தார்.