​​ தமிழில் ரீஎண்டரி கொடுக்கும் டாப்சி ?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழில் ரீஎண்டரி கொடுக்கும் டாப்சி ?

Published : Aug 20, 2018 12:24 PM

தமிழில் ரீஎண்டரி கொடுக்கும் டாப்சி ?

Aug 20, 2018 12:24 PM

ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. அதன்பின் வந்தான் வென்றான், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். தெலுங்கிலும் கால்பதித்தார் டாப்சி. 

சஷ்மே பதூர் திரைப்படத்தின் மூலம் இந்தியில் கால்பதித்தார். பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுடன் நடித்த பிங்க் திரைப்படத்திற்கும், டாப்சியின் நடிப்பிற்கும் நல்ல வரவேற்பு கிடைக்க, பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் வெளியாக மல்க் திரைப்படமும் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரது திரைப்பட தேர்வு பாலிவுட்டின் முன்னனி நடிகைகளுக்கே சவால்விடும் வகையில் இருக்கிறது.

இந்நிலையில், அஜெய் பூபதி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான RX100 படம் தமிழில் உருவாகயிருக்கிறது. இந்த படத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக டாப்சியை நடிக்க வைக்க கேட்டுள்ளார்களாம். இருப்பினும் டாப்சி அதிக சம்பளம் கேட்பதாக கூறப்படுகிறது.