​​ அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு படம் பிடிக்கப்பட்டது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு படம் பிடிக்கப்பட்டது

Published : Aug 20, 2018 11:58 AMஅழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு படம் பிடிக்கப்பட்டது

Aug 20, 2018 11:58 AM

பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து போனதாகக் கருதப்பட்ட மரக்கங்காரு தற்போது படம் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா என்ற இடத்தில் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் ஸ்மித் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துக் கொண்டிருந்த போது குறிப்பிட்ட மரத்தில் சிறு சிறு கீறல்கள் இருப்பதைக் கண்டார்.

அதனைத் பின்தொடர்ந்து சென்று பார்த்தபோது ஒரு மரத்தின் உச்சியில் விசித்திரமான உயிரினம் இருப்பதைக் கண்டு படம் பிடித்தார். அதன் பின்னர்தான் அந்த உயிரினம் மரக்கங்காரு என்பது தெரியவந்தது. 90 ஆண்டுகளுக்கு முன் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட புள்ளி மரக்கங்காரு இன்னமும் இந்தோனேஷிய தீவுகளில் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தக் கங்காருவை கண்காணித்து, அதன் பெருக்கத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.