​​ கருணாநிதி நினைவிடத்துக்கு மதிமுகவினர் அமைதிப்பேரணி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கருணாநிதி நினைவிடத்துக்கு மதிமுகவினர் அமைதிப்பேரணி

கருணாநிதி நினைவிடத்துக்கு மதிமுகவினர் அமைதிப்பேரணி

Aug 19, 2018 11:30 PM

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், சென்னையில் ம.தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய பேரணியில், மதிமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடம் வரை இந்தப் பேரணி நடைபெற்றது.

பின்னர் கருணாநிதியின் நினைவிடத்தில் ம.தி.மு.க. சார்பில், மலர் வளையமும், மாலையும் அணிவிக்கப் பட்டது. பின்னர் செய்தியளார்களிடம் பேசிய வைகோ, சமூகநீதியின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்தவர் கருணாநிதி என்று புகழ்ந்தார்.  திராவிட இயக்கத்துக்கு வரும் அறைகூவல்களை எதிர்த்து போராடுவேன் என்றும் வைகோ கூறினார்.