​​ நடிகர் விக்ரம் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் விக்ரம் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்


நடிகர் விக்ரம் கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.35 லட்சம் அனுப்பியுள்ளார்

Aug 19, 2018 7:28 PM

நடிகர் விக்ரம் கேரள வெள்ள நிவாரணத்துக்கு 35 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், தனி நபர்களும் தொடர்ந்து உதவிகளை வழங்கிவருகின்றனர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, கமல், ரஜினி, நயன்தாரா, விஜய் சேதுபதி, சித்தார்த் உள்ளிட்டோர் கேரள வெள்ள நிவாரணத்துக்கு நிதி வழங்கியுள்ளனர்.

இந்த வரிசையில் நடிகர் விக்ரம் இன்று 35 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கேரள முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். கேரள மக்களுக்காக பிரார்த்திப்பதாகவும், பேரிடரை சீர் செய்வதற்குத், தம்மால் இயன்ற தொகையை பணிவோடு வழங்குவதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.