​​ புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்

Jan 22, 2018 11:07 AM

புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தலைமை ஆணையராக அச்சல் குமார் ஜோதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். இவர் வரும் 23-ம் தேதியுடன் ஓய்வு பெறும் நிலையில்,அதே தேதியில் தற்போது ஓம் பிரகாஷ் ராவத் பொறுப்பேற்கவுள்ளார்.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய ஓம் பிரகாஷ் ராவத் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தேர்தல் ஆணையராக உள்ளார். இவரது தேர்தல் ஆணையர் பொறுப்பில் அசோக் லவாசா என்ற முன்னாள் நிதித்துறை செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.