​​ வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

Published : Aug 19, 2018 3:56 PM

வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதி

Aug 19, 2018 3:56 PM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இரவில் மருத்துவர்கள் இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திண்டுக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வேடசந்தூர் அரசு மருத்துவமனையை நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கும் நபர்களும் அவசர சிகிச்சைக்காக இங்கு கொண்டு வரப்படுகின்றனர்.

இந்நிலையில் இம்மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணிக்கு வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மேலும் மருத்துவப் பரிசோதனைக்காக கைதிகளை அழைத்துவரும் போலீசாரும் பலமணிநேரம் காத்திருக்கும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.