​​ கேரளாவில் அயராது மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு விராட் கோலி நன்றி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் அயராது மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு விராட் கோலி நன்றி

கேரளாவில் அயராது மீட்புப் பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு விராட் கோலி நன்றி

Aug 18, 2018 10:39 PM

கேரளாவில் அயராது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார். முடிந்தவரை அனைவரும் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கோலி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரும் கேரள மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.