​​ பெரா தீவில், அரை மணி நேரத்தில் வேட்டையாடப்பட்ட 180 திமிங்கிலங்கள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெரா தீவில், அரை மணி நேரத்தில் வேட்டையாடப்பட்ட 180 திமிங்கிலங்கள்

Published : Aug 18, 2018 2:05 AMபெரா தீவில், அரை மணி நேரத்தில் வேட்டையாடப்பட்ட 180 திமிங்கிலங்கள்

Aug 18, 2018 2:05 AM

பெரோ((Faroe)) தீவில், அரை மணி நேரத்தில், 180 திமிங்கிலங்கள் வேட்டையாட்டப்பட்ட நிகழ்வால், கடற்கரை பகுதி முழுவதும் ரத்த மயமாக காட்சியளித்தது.

பிரிட்டனுக்கு வடக்கே, அட்லாண்டிக் பெருங்கடற்பரப்பில் அமைந்திருக்கும் தீவு நாடு, பெரோ((Faroe)).... இங்கு, சாண்டாவாகு((Sandavágu)) என்ற கடற்கரை கிராமத்தில், திமிங்கில வேட்டை பிரசித்தமாக உள்ளது. கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், திமிங்கில வேட்டை நின்றபாடில்லை.

image

image

அண்மையில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் ஆலஸ்டையர் வார்டு((Alastair Ward)) என்ற 22 வயது இளைஞர், தாம் பட்டப்படிப்பு முடித்ததை கொண்டாடும் வகையில், சாண்டாவாகு கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளார். அப்போது, திமிங்கில வேட்டை நடைபெற்றதை கண்டு, அவற்றை படமாக்கி வெளியிட்டுள்ளார்.

image

அரை மணி நேரத்தில், 180 திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டதாகவும், இதில், பெரியவர்கள் மட்டுமின்றி, சிறுவர்கள், இளைஞர்களும் பங்கேற்றதாகவும் ஆலஸ்டையர் வார்டு கூறியுள்ளார். இந்த திமிங்கில வேட்டையால், கடற்பகுதி முழுவதும், குருதிக்கடல் போல் மாறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.