​​ பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இறக்கை மோதி விபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இறக்கை மோதி விபத்து

பயணிகள் விமானம் தரையிறங்கும்போது ரன்வேயில் இறக்கை மோதி விபத்து

Aug 17, 2018 10:46 PM

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும்போது ரன்வேயில் மோதி விபத்துக்குள்ளானது.

சீனாவின ஜியாமென் ஏர் ((Xiamen Air)) நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் 157 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் மணிலா விமான நிலையத்தை வந்தடைந்தது. விமானம் முதல் முறை தரையிறங்க முயன்ற போது தவறான கோணத்தில் ரன்வேயை அணுகியதால் முயற்சி தோல்வி அடைந்ததாகவும், 2-வது முறை தரையிறங்க முயன்ற போது தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரன்வேயில் இறங்கியபோது கட்டுப்பாட்டை இழந்து இடது இறக்கை தரையில் மோதியது. எனினும் விமானம் பாதுகாப்பாக நிலைநிறுத்தப்பட்டதையடுத்து பயணிகளுக்கோ ஊழியர்களுக்கோ பாதிப்பு ஏற்படவில்லை