​​ வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நடிகர்கள் நிதியுதவி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நடிகர்கள் நிதியுதவி

Published : Aug 17, 2018 10:25 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நடிகர்கள் நிதியுதவி

Aug 17, 2018 10:25 PM

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி 25லட்ச ரூபாயும், நடிகை நயன்தாரா பத்து லட்ச ரூபாயும் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் வரலாறு காணாத அளவு பெருமழை பெய்து வெள்ளத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும் தொழிலதிபர்களும் நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 25லட்ச ரூபாய் வழங்கியுள்ளார். நடிகை நயன்தாரா பத்து லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.