​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நொய்யல் ஆறு வெள்ளத்தில் திறந்துவிடப்பட்டு இருக்கும் சாயப்பட்டறை கழிவுநீர்

Published : Aug 17, 2018 5:31 PM

நொய்யல் ஆறு வெள்ளத்தில் திறந்துவிடப்பட்டு இருக்கும் சாயப்பட்டறை கழிவுநீர்

Aug 17, 2018 5:31 PM

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாயப்பட்டறை கழிவுநீர் ஆற்றில் திறக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் வழியே செல்லும் வெள்ளநீர், அணைப்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்துள்ளது. ராயபுரம் - மங்கலம் சாலையை இணைக்கும் இந்த தரைப்பாலம் மூழ்கியதால், அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, வெள்ளத்தை பயன்படுத்தி திருப்பூரில் உள்ள சாயப்பட்டறைகளின் கழிவுநீர் நொய்யல் ஆற்றில் திறந்துவிடப்பட்டிருப்பதால், தண்ணீர் முற்றிலும் கருப்பு வண்ணமாக காட்சியளிக்கிறது. நச்சுநுரையும் ஆற்றில் பொங்கி வருகிறது. இந்த நிலையைப் போக்க, நச்சுக்கழிவுநீரை சாயப்பட்டறைகள் நொய்யல் ஆற்றில் திறப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.