​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தல்

Published : Aug 17, 2018 5:27 PM



ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தல்

Aug 17, 2018 5:27 PM

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஒரு கோடி ரூபாய் கேட்டு கல்லூரி மாணவன் கடத்தப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

காட்பாடி விருதம்பட்டு ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தனியார் பேருந்து நிறுவனவத்தில் மேலாளாராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் டிஷோ ரமேஷ் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறைக்காக அவர் சொந்த ஊரான காட்பாடிக்கு வந்திருந்த நிலையில் நேற்று இரவு, கார் ஒன்று ரமேஷ் வீட்டின் முன்பாக வந்து நின்றது. காரிலிருந்தவர்கள் டிஷோ ரமேஷை செல்போனில் அழைத்தததாகவும் இதனை தொடர்ந்து வெளியே வந்த அவரை, காரிலிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மாணவன் டிஷோ ரமேஷின் செல்போனிலிருந்து, அவரது பெற்றோரை கடத்தல் கும்பல் தொடர்பு கொண்டுள்ளது. அப்போது டிஷோ ரமேஷை விடுவிக்க, ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டுமென அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவனின் செல்போன் சிக்கனலை ஆராய்ந்த போது முதலில் வேலூர் சுற்றுவட்டாரங்களில் இருப்பது தெரியவந்தது- பின்னர் மாணவரின் செல்போன் சிக்னல் ஆந்திர மாநிலத்தில் அவர்கள் இருப்பது போல் காட்டியுள்ளது.

இதையடுத்து எல்லையோர சோதனைச் சாவடிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் மாணவனை மீட்பதற்காக 3 தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர். இந்நிலையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவரின் மகனை கடத்தி ஒரு கோடி ரூபாய் கேட்கப்படுவதால் கடத்தல் தொடர்பாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மாணவரே கடத்தல் நாடகம் ஆடுகிறரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.