​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18 வயது நிராம்பாத மாணவியை திருமணம் செய்ததாக புகார் - ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைப்பு

Published : Aug 17, 2018 5:18 PM



18 வயது நிராம்பாத மாணவியை திருமணம் செய்ததாக புகார் - ராணுவ வீரரை கைது செய்து சிறையில் அடைப்பு

Aug 17, 2018 5:18 PM

வேலூரில் காதல் திருமணம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தவர்களில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியாகாததால் கடத்தல் வழக்கில் ராணுவவீரரான மணமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் கேவி குப்பத்தை சேர்ந்த 21 வயதான சதீஷ்குமார் என்ற இளைஞர் , ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலயத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் தான் கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறி பாதுகாப்பு கேட்டு வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சதீஷ்குமார் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில் 18 வயது நிரம்பாத தங்கள் மகளை சதீஷ் திருமணம் செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதனை அடுத்து மாணவி 18 வயது நிரம்பாதவர் என்பதை உறுதி செய்த போலீசார் ராணுவ வீரர் சதீஷ் மற்றும் அவருக்கு உதவிய அவரது நண்பரான மற்றொரு ராணுவ வீரரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.