​​ கேரளாவில் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் குடும்பங்களில் குழந்தைகளுக்கு பால் கூட இல்லாமல் இருப்பதாக வேதனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரளாவில் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் குடும்பங்களில் குழந்தைகளுக்கு பால் கூட இல்லாமல் இருப்பதாக வேதனை

கேரளாவில் வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் குடும்பங்களில் குழந்தைகளுக்கு பால் கூட இல்லாமல் இருப்பதாக வேதனை

Aug 17, 2018 4:24 PM

கேரளா மாநிலம் ஆலுவா அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் உணவு தண்ணீர் இன்றி சிக்கித் தவிக்கும் குடும்பம் தங்களை மீட்குமாறு கண்ணீர் மல்க வீடியோ பதிவு செய்து அனுப்பியுள்ளனர்.

எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா நகர் அருகே உள்ள கடுங்களூர் எனும் பகுதி வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தொடர்ந்து பெய்த கனழை காரணமாக இங்கு வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனால் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாக ஒரு குடும்பம் கண்ணீர் மல்க வாட்ஸ் ஆப் வீடியோ அனுப்பியுள்ளது. கைக்குழந்தைக்கு பால் கூட கொடுக்க முடியாத நிலையில் இருப்பதால் தங்களை விரைந்து மீட்க வேண்டும என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.