​​ வெகு சிறப்பாக நடைபெற்றது செங்கழுநீராம்மன் கோயில் தேரோட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெகு சிறப்பாக நடைபெற்றது செங்கழுநீராம்மன் கோயில் தேரோட்டம்

Published : Aug 17, 2018 4:10 PM

வெகு சிறப்பாக நடைபெற்றது செங்கழுநீராம்மன் கோயில் தேரோட்டம்

Aug 17, 2018 4:10 PM

புகழ் பெற்ற புதுச்சேரி வீராம்பட்டிணம் செங்கழுநீர் அம்மன் கோயில் தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

இக்கோயிலின் ஆடித் திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வைக்கப்பாட்டு முக்கிய வீதிகள் வழியாக பவனி நடைபெற்றது. தேரோட்டத்தில் அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.