​​ அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணி திருவிழா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணி திருவிழா

அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவணி திருவிழா

Aug 17, 2018 4:04 PM

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இங்கு ஆண்டுதோறும் ஆவணி, தை,வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி இன்று அதிகாலை 3மணிக்கு நடைதிறக்கப்பட்டு பணிவிடையும், 5மணிக்கு கொடியேற்றத்திற்கு குரு அழைப்பும் நடைபெற்றது.பின்னர் 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பூஜிதகுரு பால.பிரஜாபதிஅடிகள் தலைமை வகித்து கொடியேற்றினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருத்தலங்களில் சுவாமிதோப்பு அய்யா னவகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆவணி, தை,வைகாசி ஆகிய மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி இன்று அதிகாலை 3மணிக்கு நடைதிறக்கப்பட்டு பணிவிடையும், 5 மணிக்கு கொடியேற்றத்திற்கு குரு அழைப்பும் நடைபெற்றது. பின்னர் 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்திற்கு பூஜிதகுரு பால.பிரஜாபதிஅடிகள் தலைமை வகித்து கொடியேற்றினார், கொடியேற்றத்திற்கு பூஜிதகுருக்கள் பால.ஜனாதிபதி, பால.லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்னராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் கேரளா, மற்றும் தமிழகத்திலிருந்தும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டு அய்யாவை வழிபட்டனர். கொடியேற்றத்தைத்தொடர்ந்து தொட்டில் வாகன பவனி நடைபெற்றது, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
எட்டாம் நாள் திருவிழாவில் அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாள் திருவிழாவான வரும் 27-ம்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் திருஏடு வாசிப்பு, பணிவிடைகள், வாகனப்பவனி, மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.