​​ கோவில் விழாவில் பாட்டு கேட்பது தொடர்பான மோதலில் ராணுவ வீரரின் கை துண்டிப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவில் விழாவில் பாட்டு கேட்பது தொடர்பான மோதலில் ராணுவ வீரரின் கை துண்டிப்பு


கோவில் விழாவில் பாட்டு கேட்பது தொடர்பான மோதலில் ராணுவ வீரரின் கை துண்டிப்பு

Aug 17, 2018 11:17 AM

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கோவில் விழா இசைக்கச்சேரியில் பாட்டு கேட்பது தொடர்பான மோதலில் ராணுவ வீரரின் வலது கை துண்டாக வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி புதன் கிழமை இசைக்கச்சேரி நடந்தது. அதில் பாட்டு கேட்பது தொடர்பாக ராணுவ வீரர் பார்த்திபன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜவகர் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. அங்கிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பிய நிலையில் வியாழக்கிழமை மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

image

சமரசம் செய்ய வந்த ஜவகரின் தந்தை வெங்கடேசனை , ராணுவ வீரர் பார்த்திபன் கையை நீட்டி பேசியதாக கூறப்படுகின்றது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வீட்டுக்குள் சென்று அரிவாளை எடுத்து வந்த ஜவகர், ராணுவ வீரர் பார்த்திபனை வெட்டினார். இதில் அவரது வலது கை மணிக்கட்டில் இருந்து துண்டானது.

அக்கம் பக்கத்தினர் திரண்டதும் அங்கிருந்து ஜவகர் தப்பிச்சென்று விட்டார். கைதுண்டான நிலையில் அலறித்துடித்த பார்த்திபனை மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

திருவிழா உற்சாகத்தில் கச்சேரியில் பிடித்த பாடல் கேட்பது தொடர்பான தகராறில் விடுப்புக்கு வீட்டுக்கு வந்த ராணுவ வீரர் ஒருவர் கையை இழந்து தவிக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.