​​ எஃகு ஏற்றுமதி விலையை உயர்த்தும் ஜப்பான், தென்கொரியா
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எஃகு ஏற்றுமதி விலையை உயர்த்தும் ஜப்பான், தென்கொரியா

எஃகு ஏற்றுமதி விலையை உயர்த்தும் ஜப்பான், தென்கொரியா

Aug 17, 2018 1:40 AM

இந்தியாவில் எஃகு தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, அதன் ஏற்றுமதி கட்டணத்தை உயர்த்த ஜப்பான் மற்றும் தென்கொரிய நாடுகள் முடிவு செய்திருக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம், நடப்பு நிதியாண்டு தொடங்கியதிலிருந்து, நாட்டின் இரும்புத் தேவை அதிகரித்திருக்கிறது. தென்கொரியாவிலிருந்து  எஃகு இறக்குமதி 31 விழுக்காடும், ஜப்பானிலிருந்து எஃகு இறக்குமதி 30 விழுக்காடு அதிகரித்திருக்கிறது. இவ்வாறு இந்தியாவில் எஃகு தேவை அதிகரித்திருப்பதாலும், இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்திருக்கும் கட்டுப்பாடுகளாலும், எஃகு ஏற்றுமதி விலையை உயர்த்த, ஜப்பான், தென்கொரிய நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன.

இதனால், எஃகு விலை உயரும் என்பதால், அவற்றின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய எஃகு துறை அமைச்சர் செளத்தரி பிரேந்தர் சிங் ((Chaudhary Birender Singh)) தெரிவித்திருக்கிறார்.