​​ பாகிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல்

Published : Aug 16, 2018 6:00 PM

பாகிஸ்தானில் ட்விட்டர் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல்

Aug 16, 2018 6:00 PM

பாகிஸ்தானில் ட்விட்டர் வலைத்தளம் தொடர்ந்து செயல்பட சிக்கல் ஏற்பட்டுள்ளது.  சமூகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய, தகாத கருத்துகள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஃபேஸ்புக், யூ டியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதாக அந்நாட்டு தொலைத்தொடர்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் ட்விட்டர் தவிர்த்து மற்ற அனைத்து வலைத்தளங்களும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம் கூறியுள்ளது.

எனவே இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபடி ட்விட்டருக்கு இறுதி நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காவிட்டால் ட்விட்டர் பாகிஸ்தானில் முற்றிலும் முடக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.