​​ இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு...
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு...


இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு...

Aug 16, 2018 3:30 PM

இந்திய ரூபாயின் மதிப்பு செவ்வாய்க் கிழமை மாலை சரிவில் இருந்து சற்றே மீண்டிருந்த நிலையில் இன்று காலை மீண்டும் சரிந்துள்ளது.

துருக்கி பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை அடைந்தது. செவ்வாய்க் கிழமை காலை 11 மணி அளவில் அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பு 70 ரூபாய் 08 பைசாவாக சரிந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி எடுத்த சில நடவடிக்கைகளால் மாலை 69 ரூபாய் 90 பைசாவாக மேம்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் சரிந்து 70 ரூபாய் 32 பைசாவாக சரிந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு மூன்றாவது நாளாக தொடர்ந்து சரிந்திருப்பது குறிப்பிடத் தக்கது.