​​ சுதந்திரதின கொடிமரத்திற்குள் புகுந்த நல்லபாம்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுதந்திரதின கொடிமரத்திற்குள் புகுந்த நல்லபாம்பு


சுதந்திரதின கொடிமரத்திற்குள் புகுந்த நல்லபாம்பு

Aug 16, 2018 1:23 PM

ஒடிசாவில் சுதந்திர தினத்திற்கு கொடி ஏற்ற முயன்றபோது கொடிமரத்தில் இருந்த நல்லபாம்பு சிக்கியது. பங்கி என்ற இடத்தில் பங்கி ஆட்டோ கல்லூரியின் மாணவர் விடுதியில் நேற்று சுதந்திர தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

image

அப்போது ஓரமாகக் கிடந்த கொடி மரத்தை நடுவதற்கு விடுதி நிர்வாகிகள் முயன்ற போது அதற்குள் நல்லபாம்பு ஒன்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாம்பு ஆர்வலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த அவர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் நீண்ட குழாயின் உதவியுடன் பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர். அதன் பின்னரே அந்த விடுதியில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.