​​ குஜராத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குஜராத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

குஜராத்தில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீவிபத்து

Aug 16, 2018 12:10 AM

குஜராத்தின் அம்ரேலியில் ஐஸ்கிரீம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெரிய தீவிபத்து ஏற்பட்டதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் சீத்தல் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் திடீரெனத் தீப்பிடித்து மளமளவெனப் பரவியது. இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாகப் போராடித் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திரங்களும் பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.