​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தி நடிகை தீபிகா படுகோனே- ரண்வீர் சிங் திருமணம்

Published : Aug 15, 2018 1:43 AM

இந்தி நடிகை தீபிகா படுகோனே- ரண்வீர் சிங் திருமணம்

Aug 15, 2018 1:43 AM

பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே ,நடிகர் ரண்வீர் சிங் திருமணம் இத்தாலியில் நடைபெறுகிறது.

‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த தீபிகா படுகோனே இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சர்ச்சையை ஏற்படுத்திய ‘பத்மாவத்’ படத்தில் ராணி பத்மாவதி வேடத்தில் நடித்த தீபிகாவும், வில்லனாக நடித்த ரண்வீர் சிங்கும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தீபிகா படுகோனே-ரண்வீர்சிங் திருமண ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

நவம்பர் 20ந் தேதி இத்தாலியில் திருமணம் நடைபெறும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் தகவல் வெளியிட்டு உள்ளனர். திருமணத்திற்கு மொத்தம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா திரும்பிய பிறகு நடிகர்-நடிகைகளை அழைத்து மும்பையில் திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.