​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் - ராகுல் காந்தி

Published : Aug 14, 2018 8:03 PM

காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துள்ளேன் - ராகுல் காந்தி

Aug 14, 2018 8:03 PM

காங்கிரஸ் கட்சியை தாம் திருமணம் செய்துகொண்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். ஹைதாராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நாளிதழ்கள், ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களோடு, ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது, தாங்கள் எப்போது தான் திருமணம் செய்து கொள்வீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, தாம் காங்கிரஸ் கட்சியை திருமணம் செய்துகொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மத்தியில் நடைபெறும் ஆட்சி குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு, 2019ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக 230 இடங்களை பிடிப்பது கடினம் என்று பதிலளித்த ராகுல் காந்தி, எனவே, நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை என்று கூறினார்.