​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த பாஜக திட்டம்

Published : Aug 14, 2018 6:05 PM

நாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்த பாஜக திட்டம்

Aug 14, 2018 6:05 PM

11 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்து பா.ஜ.க. பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த ஆண்டு  மே மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும் காங்கிரஸ் ஆளும் மிஜோரம் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பரிலும் ஆட்சிக்காலம் முடிவடைகிறது.

அதனைத் தொடர்ந்து இந்த மாநிலங்களில் குடிரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க. ஆளும் ஹரியானா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைகளின் காலம் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் முடியும் நிலையில் அந்த மாநிலங்களில் முன்கூட்டியே தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநில சட்டப்பேரவைகளின் காலம் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டியே நிறைவடைகின்றன. பீகார் சட்டப்பேரவையின் காலம் 2020-ல் முடிவடையும் நிலையில் அங்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.