​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திண்டுக்கல் பள்ளி மாணவர்களின் சாதனை முயற்சி

Published : Aug 14, 2018 5:47 PM

திண்டுக்கல் பள்ளி மாணவர்களின் சாதனை முயற்சி

Aug 14, 2018 5:47 PM

திண்டுக்கல்லில் சாதனை முயற்சியாக நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய 703 விடுதலை போராட்ட வீரர்களின் வேடம் அணிந்த மாணவர் இந்திய வரைபட தோற்றத்தில் அணிவகுத்தனர்.

நாளை 72வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், திண்டுக்கல் குருமுகி வித்யாலயா பள்ளியில், நாட்டின் சுதந்திரதிற்காக போராடிய வீடுதலை வீரர்களை நினைவு கூறும் வகையில் பள்ளி மாணவர்களை கொண்டு சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திரத்திற்கு போராடிய காந்தி, நேரு, ஜான்சிராணி, வேலுநாச்சியார், வீரபாண்டியகட்டபொம்மன் உள்ளிட்ட 703 தியாகிகளின் வேடம் அணிந்து இந்திய வரைபடமாக அணிவகுத்து நின்றனர்.